தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/பைபிள்/நம்பிக்கையும் நற்செயலும்

நம்பிக்கையும் நற்செயலும்

நம்பிக்கையும் நற்செயலும்


ADDED : செப் 21, 2010 06:09 PM

Google News

ADDED : செப் 21, 2010 06:09 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* இறைவன் கூறுகின்றான்: எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு நற்பணிகள் ஆற்றி தொழுகையையும் நிலைநாட்டி, ஜகாத்தும்(தர்மமும்) கொடுத்து வருகிறார்களோ அவர்களுக்கு உரிய கூலி நிச்சயமாக அவர்களுடைய அதிபதியிடம் உண்டு. அவர்களுக்கு எவ்வித அச்சமும் இல்லை அவர்கள் துயரப்படவும் மாட்டார்கள்.

* நம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்களையும் பூமியில் அராஜகம் செய்து திரிபவர்களையும் நாம்

சமமாக்கி விடுவோமா என்ன? இறையச்சமுள்ளோரை ஒழுக்கக் கேடர்களைப் போன்று ஆக்குவோமா, என்ன?

* நம்பிக்கையாளராய் இருப்பவர் பாவம் செய்தவர் போல ஆகிவிடுவாரா?

* நபிகள் நாயகம்(ஸல்) நவின்றார்கள்: தனக்கு விரும்புவதையே தனது சகோதரனுக்கும் விரும்பாத வரை ஒருவன் இறைநம்பிக்கையாளனாக மாட்டான்.

* எவருடைய அண்டை வீட்டார் அவரது துன்பங்களை விட்டுப் பாதுகாப்பு பெறவில்லையோ அவர் இறைநம்பிக்கை இல்லாதவர்.

* நாணமும், பாதையில் கிடக்கும் தொல்லை தரும் பொருட்களை அப்புறப்படுத்துவதும் இறைநம்பிக்கையின் பகுதிகளாகும்.

(வேத வரிகளும் தூதர்மொழிகளும் நூலில் இருந்து)



Trending





      Dinamalar
      Follow us